அன்று மொடக்குறிச்சி இப்போது நிஜாம்பாத்

தமிழ்நாட்டில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் கடந்த 1996 தேர்தலில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 1.016 விவசாயிகள் உட்பட 1,033பேர் போட்டியிட்டனர். தேர்தல் வரலாற்றில் இது போன்று நடந்து இல்லை. இன்று பக்கத்து மாநிலத்தில் இதே நிலை. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மக்களவை தேர்தலில் நிஜாம்பாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மஞ்சள், சிவப்பு சோளம் ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யாததை கண்டித்து கவிதா போட்டியிடும் நிஜாம்பாத் மக்களவை தொகுதியில் 1,000 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யக் கோரி, விவசாயிகள் தெலங்கானாவில் கடந்த மூன்று வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: