பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்க கோரி மனு: தமிழக அரசு, சிபிஐ பதில் தர நோட்டீஸ்

சென்னை:  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த 13ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  

அந்த மனுவில், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை குறிப்பிட்டது, மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த மனு தலைமை நீதிபதி தாஹில் ரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: