சேலத்தில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சேலம்: சேலத்தில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தன. சேலம் புதிய பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட நகர்நல அலுவலர் பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தினர். ஒருக்கடையில் 2 லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து கடை உரிமையாளரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: