தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது. மார்ச் 26-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீது மார்ச் 27-ல் பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 29 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இதனையொட்டி பதற்றமான தொகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கி உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் பொது வேட்பாளர்  வைப்பு தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் வைப்பு தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும். வைப்பு தொகையை ரொக்கமாகவோ, ரிசர்வ் வங்கி செலானாகவோ கட்ட வேண்டும் என வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் செக் ஏற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவுடன் சுயவிவரம், 5 ஆண்டு வருமான வரி கணக்கையும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்துகள் மற்றும் குற்ற வழக்குகள் இருந்தால் அவற்றின் விவரங்களையும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பெறப்படு்ம் இடங்களில் உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: