அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் குவிப்பு : கண்காணிப்பு தீவிரம்

டெல்லி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக இந்தியா கருதுகிறது. இந்நலையில் ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இன்று தாக்குதல் நடத்தியது. அதிகாலை 5.30 மணிக்கு சுந்தர் பனி பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்டார் ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில காலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சூழல் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லையில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் காரணமாக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் அணி வகுத்துள்ளன. ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா உள்ளிட்ட 60 போர்க் கப்பல்கள், இந்திய கடலோர காவல் படையின் 12 போர்க்கப்பல்கள் வடக்கு அரபிக்கடல் பகுதியில் தயார் நிலையில், நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களான ஐ.என்.எஸ் அரிஹந்த், ஐ.என்.எஸ் சக்ரா ஆகியவையும் பாகிஸ்தான் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: