ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ கூறியுள்ளார். மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டேல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நாட்டு நடப்பு உள்ளிட்ட பல்வேறு பொது விஷயங்கள் குறித்து அவர் மாணவிகளுடன் பேசினார். இந்த நிலையில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி என்று கல்லூரி கல்வி இயக்குனர் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது எப்படி அனுமதிக்கலாம்? என்றும், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தர இணை இயக்குனருக்கு, கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

மேலும், அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசியல் ரீதியான நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றதால் நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என்று கூறியுள்ளார். கல்லூரி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை தந்துள்ளார் என சத்தியபிரதா சாஹூ கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: