இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.... 42 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சரிந்தன.

இந்த கனமழைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும் மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: