பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் பரபரப்பான அரை இறுதியில் பெடரர் - நடால் மோதல்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்) - ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதுகின்றனர்.அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதியில், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் (67வது ரேங்க்) மோதிய பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1  மணி, 13 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் ரஷ்ய வீரர் கரென் கச்சனோவை எதிர்கொண்ட நடால் 7-6 (7-2), 7-6 (7-2) என 2 செட்களிலும் டை பிரேக்கரில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி  2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது.

அரை இறுதியில் நடால் - பெடரர் மோதுவது டென்னிஸ் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. இருவரும் 39வது முறையாக மோத உள்ளனர். நடால் 23-15 என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும், கடைசியாக  மோதிய 5 முறையும் பெடரர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் அரை இறுதியில், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் மோதிய ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு  அரை இறுதியில் உக்ரைன் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினா (6வது ரேங்க்) 3-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவிடம் (60வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வி கண்டார். இறுதிப் போட்டியில்  ஏஞ்சலிக் கெர்பர் - பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: