நியூசிலாந்தில் 2 மசூதிகளில் தாக்குதல்: 9 இந்தியர்களை காணவில்லை என தகவல்

 கிறிஸ்ட்சர்ச் :  நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தக ஆதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

alignment=

இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியினர், இந்தியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது. நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் 9 பேரை காணவில்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

alignment=

இவ்விவகாரத்தில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்த காத்து இருப்பதாக எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் அதிகமான தகவல்களை பெற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம், உறுதியாக தெரியாமல் எதையும் அறிவிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில்  ஐதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பர்ஹஜ் அஷான் (வயது 31) என்பவர் மாயமாகியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதி அருகிலேயே வசித்து வந்த பர்ஹஜ், தொழுகைக்குச் சென்றார். பின் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இவருக்கு 3 வயதில் மக ளும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

alignment=

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ஐதராபாத்தில் உள்ள பர்ஹஜின் தந்தை முகமது சையூதிதினிடம் நியூசிலாந்தில் இருந்து அவர் மனைவி போனில் நேற்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிய வந்துள்ளது. அவர் குடும்பத்தினர், உடனடியாக நியூசி லாந்து செல்ல, ஐதராபாத் எம்.பி அசாவுதீன் ஓவைசியிடம் முறையிட்டனர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: