சில்லி பாயின்ட்...

* சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வரும் யோனெக்ஸ் சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய வீரர்கள் சுபாங்கர் தே, சாய் பிரனீத் தகுதி பெற்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது.

* அஜர்பைஜானில் நடக்கும் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை மகளிர் பிரிவு பைனலில் விளையாட இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தகுதி பெற்றார்.

* சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு இந்திய வீரர் லக்‌ஷியா சென் முன்னேறி உள்ளார்.

* பார்முலா 1 கார் பந்தயம் 2019 சீசனின் முதல் போட்டியான ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரீ தகுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது. பிரதான போட்டி நாளை நடைபெறும்.

* அமெரிக்கா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளிடையே துபாயில் நேற்று நடந்த முதல் டி20 போட்டி கனமழை காரணமாக ரத்தானது. அமெரிக்கா 15 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் (ஜஸ்கரன் மல்கோத்ரா 28, ஸ்டீவன் டெய்லர் 72, கோம்பு ராய் சில்வா 25); யுஏஇ 3.3 ஓவரில் 29/2.

* தென் ஆப்ரிக்க வீரர் டி காக் கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 83, 81, 94, 121, 51 ரன் விளாசி உள்ளார். இலங்கையுடன் இன்று நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் அவர் அரை சதம் கடந்து அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: