பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் கெர்பர்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதியில், உள்ளூர் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்சுடன் (36வது ரேங்க்) மோதிய கெர்பர் (8வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அவர் 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு கால் இறுதியில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் (23வது ரேங்க்), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் (5வது ரேங்க்) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பெலிண்டா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 16 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதவிருந்த கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து டொமினிக் தீம் அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் கனடா வீரர் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச்சை வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: