ஜான்சன் பவுடரால் வந்த புற்றுநோய் பெண்ணுக்கு 200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: கலிபோர்னியா கோர்ட் அதிரடி

கலிபோர்னியா: பேபி பவுடர் பயன்படுத்தியதால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 200 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  பேபி டால்கம் பவுடர் சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். குழந்தைகளுக்கு மிக பாதுகாப்பான பவுடர் என்று கருதப்பட்டாலும், இதை பயன்படுத்திய பெண்கள் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அந்தரங்க பகுதியில் பயன்படுத்துவோர் கர்ப்பப்பை புற்றுநோய்க்கும், முகத்தில் பயன்படுத்துவோர் நுரையீரல் புற்றுநோய்க்கும் ஆளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக பல ஆயிரம் வழக்குகள் உலகின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதற்கு காரணம், இந்த பவுடரில் கலக்கப்படும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்தான் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வக பரிசோதனை ஆதாரங்களும் வெளிவந்துள்ளன. ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை அந்தரங்க பகுதியில் தொடர்ந்து பயன்படுத்திய பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்காவில் மிசவ்ரியில் உள்ள நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 470 கோடி டாலர் (சுமார் 32,900 கோடி) வழங்க ஜான்சன் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்தது.  இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பெண் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதை விசாரித்த கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக  2.9 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி வழங்க உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: