தடுப்புச் சுவருக்கு அவசரநிலை அதிபர் டிரம்ப் முடிவை நிராகரித்தது செனட் சபை

வாஷிங்டன்: அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச் சுவர் விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்வதை செனட் சபை நேற்று நிராகரித்தது.மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் முயற்சியை அதிபர் டிரம்ப் மேற்கொண்டார். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய செனட் சபை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்க அரசின் முடக்கம் வரலாற்றில் இல்லாத அளவு 30 நாட்களுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், சுவர் எழுப்ப அவசரநிலையை பிரகடனம் செய்யும் முடிவை அதிபர் டிரம்ப் எடுத்தார்.   செனட் சபையில் இதற்கான ஓட்டெடுப்பில் 12 குடியரசுக் கட்சி எம்பி.க்கள்,  ஜனநாயக கட்சியினருடன் சேர்ந்து கொண்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது டிவிட்டரில், ஜனநாயக கட்சியினரின் ஆதரவுடன் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தினால், எல்லைப் பகுதியில் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கும். நாட்டின் பாதுகாப்பு, எல்லைச் சுவர் தேவை கருதி, எனக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார். அதிபர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பெற வேண்டும் என்பது கட்டாயம். இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு அந்தளவு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: