ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்; கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது பற்றி பி.சி.சி.ஐ முடிவெடுக்கலாம்; உச்சநீதிமன்றம்

டெல்லி: ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது பற்றி பி.சி.சி.ஐ முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறி கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது பற்றி பி.சி.சி.ஐ முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2013 ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பிசிசிஐ கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த கேரளா ஐகோர்ட் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டும் அவர் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ. மறுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது பற்றி பி.சி.சி.ஐ முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக 3 மாதத்தில் முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: