ஐபிஎல் துளிகள்

மீண்டும் ஹர்திக்: காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில்  ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. அதனால் பெங்களூரில் தங்கி நேஷனல் கிரிக்கெட் அகடாமியில்  பயிற்சி பெற்றார். இப்போது பூரண உடல் தகுதி பெற்றிருப்பதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். அதற்காக  செவ்வாய்கிழமையில் இருந்து மும்பை இண்டியன்ஸ் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ஹர்திக் விளையாடுவது உறுதியாகி உள்ளது.

டோனி பராக்: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றிருந்த அம்பாதிராயுடு இன்று அல்லது நாளை அணியுடன் சேர்கிறார். அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி நாளை சென்னை வர உள்ளார். அதன்பிறகு சென்னை அணியின் சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

கொல்த்தாவிலும் இன்-அவுட்: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியவர்கள் கமலேஷ் நாகர்கோட்டை, ஷிவம் மவி இருவரும் காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து இது விலகியுள்ளனர். புதிதாக கேரளவை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லிக்கு கங்குலி ஆலோசகர்:

டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் புதிய பெயர ‘டெல்லி கேபிடல்’. இந்த அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி அணியில் என்ன பொறுப்பு என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வார்களாம்.

கோப்பையை வெல்வோம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. 2015ம் ஆண்டு இறுதிப்போட்டியில் பங்கேற்றதுதான் அதிகபட்ச சாதனை. அதனால் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.  கூடவே மயங்க் அகர்வால், கருண்நாயர், நிகோலஸ் பூரண், மொய்சஸ் ஹென்றிகியூஸ், டேவிட் மில்லர், சாம் கர்ரன் ஆகியோரையும் நம்பியிருக்கிறது பஞ்சாப்.

ஸ்ரீசாந்த் வழக்கில் இன்று தீர்ப்பு:

சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறி கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இங்கிலாந்து வெல்லுமாம் ஆரூடம் சொல்லும் கவாஸ்கர்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தமுறை இங்கிலாந்துதான் கோப்பைை வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஆரூடம் சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் 2011, 2015ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டியை நடத்திய இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகள்தான் கோப்பையை வென்றன. அதனால் இந்த முறை போட்டியை நடத்தும் இங்கிலாந்துதான் வெல்லும் என்கிறார். கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து என்றாலும் இதுவரை ஒருமுறை கூட இங்கிலாந்து கோப்பையை வென்றதில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: