ரூபாய் மதிப்பு 25 காசு உயர்வு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 25 காசு வலுவடைந்து ரூ.69.89 ஆக இருந்தது. காலை வர்த்தகம் துவங்கியபோது ரூபாய் மதிப்பு ரூ.69.99 ஆக இருந்தது. வர்த்தக இடையில் ரூ.70.03 என சரிந்து பின்னர், ரூ.69.82 என வலுவடைந்தது. இறுதியாக முந்தைய நாளை விட 25 காசு உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் ரூபாய் மதிப்பு சரிந்து ரூ.70.14 ஆக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்தது ரூபாய் மதிப்பு உயர காரணமாக அமைந்ததாக பங்கு வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: