மாநகராட்சி சுகாதார திருவிழா 3200 பேருக்கு பரிசோதனை

சென்னை: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில், வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் பாராளுமன்றத் தொகுதி ஒன்றிற்கு 3 இடங்கள் வீதம் 3 நாட்களுக்கு சுகாதார திருவிழா மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பபடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சுகாதார திருவிழா மற்றும் மருத்துவ முகாம் வட சென்னையில் காலடிப்பேட்டை சென்ைன உயர்நிலைப் பள்ளி, மத்திய சென்னையில் சூளைமேடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ெதன் சென்னையில் தரமணி சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாம்களில் சிறப்பு 833 ஆண்கள், 1751 பெண்கள், 635 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 3219 பேர் கலந்து கொண்டனர். இதில் 893 பேருக்கு ரத்த பரிசோதனையும், 134 பேருக்கு எக்ஸ்ரேவும், 172 பேருக்கு இசிஜி பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதைப்போன்று ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய ஐந்து வகையான இந்திய மாற்று மருத்துவ சேவைகளில் 374 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து காய்ச்சல், சளி இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலைகளுக்கான சிகிச்சைகள், மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு சிகிச்சைகள், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள், எலும்பு, கண், மற்றும் பல் மருத்துவ சிகிச்சைகள், மார்பக பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய், காச நோய், உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை மற்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதில் 81 மருத்துவர்கள், 24 மருந்தாளுனர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மருத்து பணியாளர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு சிக்ச்சைகளை அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: