புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இம்ரான்கான் புகைப்படம் மறைப்பு: இந்திய கிரிக்கெட் கிளப்பில் அதிரடி

மும்பை: புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கிளப்பில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டின் பிரதமருமான இம்ரான் கானின் உருவப்படம் மூடப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிசிசிஐயின்அங்கமான இந்திய கிரிக்கெட் கிளப்பில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இம்ரான் கானின் உருவப்படத்தை இந்திய கிரிக்கெட் கிளப் திடீரென மூடியுள்ளது. கிளப்பின் உணவகத்தில் அவரது உருவப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரின் படம் நிரந்தரமாக அங்கிருந்து நீக்கப்படுமா என்பது குறித்து, இந்திய கிரிக்கெட் கிளப் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: