புல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்...பிரதமர் மோடி பேச்சு

பாட்னா: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக இன்று பீகார் மாநிலம்  சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாட்னா மெட்ரோ ரயில் எல்.பி.ஜி. வாயு குழாய் விரிவாக்கம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு பிரதமர்  நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மேலும் புர்னியா, சாப்ரா மாவட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுமார் 100 கிலோமீட்டர் நீளத்தில் கர்மலிசாக் வடிகால்  திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியை பாட்னாவுடன் இணைக்கும் வகையில் மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை  தொடங்கி வைத்ததுடன் இந்த வழித்தடத்தில் ராஞ்சி-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் ஒன்றான குழாய் மூலம் எரிவாயு வழங்கும் ‘உஜ்ரா  கங்கா யோஜானா’ திட்டத்தின் மூலம் பீகார் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் சிறப்பான  வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்தார். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் பாகல்பூர் பகுதியை சேர்ந்த ரத்தன் குமார்  ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். மிக மோசமான  தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என்றும் புல்வாமா தாக்குததால் உங்கள் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய  இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது, பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: