புதுச்சேரியில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு

புதுச்சேரி: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மக்கள் நலன் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க கோரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கடந்த 5வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் பார்க்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகினற்னர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போராட்டமானது நடைபெற்று வருகிறது. இவர்களது பிரச்சனைகளுக்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது. இந்த போராட்டம் காரணமாக புதுவையில் ஒரு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. ஏனென்றால் கடந்த 13-ம் தேதி இந்த போராட்டமானது தொடங்கியது. 14-ம் தேதி கிரண்பேடி டெல்லி சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று அதிரடியாக டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில் இருந்து தற்போது புதுவை வந்துள்ளார். இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயனாமிக்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

ஸ்டாலின் பேட்டி;

புதுச்சேரி மக்கள் நலத்திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார். முக்கியமான 39 கோப்புகளில் கிரண்பேடி கையெழுத்திடாமல் வைத்துள்ளார். மோடிக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களை சந்தித்து தேர்தல் மூலமாகத்தான் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்; கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கக் கூடாது. புதுச்சேரி மாநில உரிமைகளை கிரண்பேடி பறிக்கிறார். புதுச்சேரி பிரச்சனையை மோடி அரசு தீர்த்து வைக்க வேண்டும். துணை நிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: