புல்வாமா தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம்...நடிகர் அமிதாப் பச்சன் அறிவிப்பு

மும்பை: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர், 78 வாகனங்களில் கடந்த 14-ம் தேதி அவர்களின் முகாம்களுக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி அதில் அகமது என்பவன், 100 கிலோ வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் வந்து, வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் உயிரிழந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவது குறித்து பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளிடம் நடிகர் அமிதாப் பச்சன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறக்கட்டளை நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: