புதுச்சேரி முதல்வர் 5-வது நாளாக தொடர் தர்ணா... பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் அழைப்பு

சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மாலை 6 மணிக்கு சந்திக்க கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி நிர்வாகம் குறித்து பேச உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  மக்கள் நலன் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க கோரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கடந்த 5வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாராயணசாமி கருப்பு சட்டையுடனும், அமைச்சர்கள், காங். உள்ளிட்ட கட்சிகள்  கருப்பு துண்டும் அணிந்து கடந்த 5 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வருகினறனர். மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரும் 21-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவசர அவசரமாக தற்போது புதுச்சேரி திரும்பிய ஆளுநர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

கிரண்பேடி பேட்டி

சட்டத்தில் எனக்குள்ள அதிகார வரம்புக்குள்தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என கிரண்பேடி தெரிவித்தார். நாராயணசாமி போராட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். நிதி பற்றாக்குறையால் பல திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் அமலாவதை உச்சநீதிமன்றம் கண்காணிக்கிறது. ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு நடத்தி என்ன உபயோகம்?, சட்டத்தை அமல்படுத்த தாம் முயற்சிப்பதை முதல்வர் நாராயணசாமி தடுக்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: