துவக்கி வைக்கப்பட்ட மறுநாளே வந்தே பாரத் ரயிலில் கோளாறு

புதுடெல்லி: பிரதமர் மோடி துவக்கி வைத்த மறுநாளே ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை ஐசிஎப்.பில் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற அதிவேக ரயில் வாரணாசி- டெல்லி இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  அப்போது, பத்திரிகையாளர்கள், அதிகாரிகளுடன் வாரணாசி சென்ற அந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டது.

 உத்தர பிரதேச மாநிலம், துன்ட்லா அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் திடீரென பிரேக் டவுன் ஆனது. கால்நடை மீது ரயில் மோதியதால், அதன் சக்கரம் தண்டவாளத்தில் பிடிப்பு இல்லாமல் வழுக்கியபடி சென்றது. இதையடுத்து ரயிலை சாதுர்யமாக டிரைவர் நிறுத்தினார். பின்னர், சக்கரத்தில் சிக்கியிருந்த கால்நடையின் பாகங்கள் அகற்றப்பட்டன. இதனால், ரயிலில் வந்த பத்திரிகையாளர்களும், அதிகாரிகளும் கடும் அவதியடைந்தனர். கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, ஒரு மணிநேரம் தாமதத்துக்கு பிறகு ரயில் டெல்லி புறப்பட்டு சென்றது. பிரதமர் மோடி ரயில் ேசவையை தொடங்கி வைத்த மறுநாளே ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த ரயில் தனது வர்த்தக ரீதியிலான முதல் சேவையை இன்று டெல்லியில் இருந்து தொடங்குகிறது. அதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று முன்தினமே விற்று தீர்ந்து விட்டன.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: