சென்னை காக்னிசென்ட் விரிவாக்க பணிகளுக்காக ரூ.25 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அரசின் முக்கிய புள்ளி யார்?

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான காக்னிசென்ட் டெக்னாலஜி நிறுவனம் சென்னையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.25 கோடி லஞ்சம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பங்கு வர்த்தக ஒழுங்காற்று ஆணையம் விதித்த ரூ.201 கோடி அபராதத்தை செலுத்த காக்னிசென்ட் டெக்னாலஜி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டில் சென்னையில் காக்னிசென்ட் விரிவாக்க பணிகளில் ஈடுபட்ட போது கட்டுமான பணிகளுக்காக லஞ்சம் கைமாறியிருப்பது தெரிய வந்துள்ளது.

லஞ்சம் கொடுத்த அந்த நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்த 2 உயரதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது தனி நபர்கள் மற்றும் அரசுக்கு இடையே நிகழ்ந்த தவறு என்று காக்னிசென்ட் கூறியிருப்பதன் மூலம் அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள் ரூ.25 கோடி லஞ்சம் பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுத்ததற்காக அந்த நிறுவனமும், அதன் உயரதிகாரிகளும் தண்டனைக்கு ஆளாகியுள்ள நிலையில், ரூ.25 கோடியை லஞ்சமாக பெற்ற அரசின் உயர் பதவியில் இருந்தது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை கேள்விகள் எழுந்துள்ளது. 2014-ம் ஆண்டு கால கட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் முக்கூர் சுப்பிரமணியன். இந்த புகாரை அவரது தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: