தி.நகரில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து 3 லட்சம் கொள்ளை

சென்னை: தி.நகர் தியாகராயர் சாலையில் அப்துல் ரகுமான் (44) என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 2.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. அதேபோல், அருகில் உள்ள பாத்திரக்கடை, கவரிங் நகை கடைகளின் பூட்டையும் உடைத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

* மண்ணடி ஜீர் தெருவை சேர்ந்த சிலம்புச்செல்வன் (45), அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடை பூட்டை உடைத்த மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

* பூந்தமல்லி கீழ்மாநகரை சேர்ந்த சின்னதுரை (34) என்பவரை வழிமறித்து 2 சவரன் செயினை பறித்துச் சென்ற அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (30) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

* ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்த அயப்பாக்கம் சந்திரன் (44), கன்னியாகுமரி மணிகண்டபிரசாத் (35) ராஜூவ் ஆகிய 3 பேர், உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும், தங்களது நண்பர்களான கார்த்திக், மோகன் ஆகிேயாரை வரவழைத்து, அங்கு சாப்பிட வந்தவர்களை தடுத்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சந்திரன், மணிகண்ட பிரசாத், ராஜூவ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய கார்த்திக், மோகனை தேடி வருகின்றனர்.

* மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருவல்லிககேணி பல்லவன் சாலையை சேர்ந்த விஜய் (எ) கோபால் (22) என்பவரை போலீசார் கைது செய்து 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

* ஜாபர்கான்பேட்டை ரெட்டி தெருவை சேர்ந்த வினோத் (38) நேற்று காலை பைக்கில் தனது மகன் ரோகித்தை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது, இயந்திர கோளாறு காரணமாக திடீரென பைக் தீப்பற்றி எரிந்தது. உடனே வினோத் மகனுடன் தப்பினார். ஆனால், அதற்குள் அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பைக் எரிந்து நாசமானது.

* பூந்தமல்லி குமணன்சாவடி நூர்துபுரம் தெருவை சேர்ந்தவர் ரோட்டே (54). வருமான வரித்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: