திருப்போரூரில் பாலியல் வன்கொடுமை செய்து மாணவியை கொன்றவருக்கு மரண தண்டனை : மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை : திருப்ேபாரூரில் பாலியல் வன்கொடுமை செய்து பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமம் லெனின் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் மலர் (55). இவரது கணவர் முனுசாமி இறந்துவிட்டார். இவர்களது மகள் திவ்யா (25). மகன் அருண்குமார் (16), 12ம் வகுப்பு படிக்கிறார். மற்றொரு மகள் தனலட்சுமி (13). இவர், பையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017 ஜூலை 23ம் தேதி மலர் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அருண்குமாரும், திவ்யாவும் ஜாதகம் பார்க்க வெளியே சென்றுள்ளனர். சிறுமி தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்து மலரும், ஜாதகம் பார்த்துவிட்டு அருண்குமார் மற்றும் திவ்யாவும் மாலை 5 மணிக்கு வீடு திரும்பினர்.அப்போது, வீட்டில் இருந்து ஒரு வாலிபர் ஓடியதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மலர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, தனலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த ெவள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவலறிந்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அதில், ஆலத்தூர் கங்கையம்மன் கோயில் தெருவை ேசர்ந்த லட்சுமணன் மகன் அசோக்குமார் (26) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரிந்தது. அவரை கைது செய்தனர். பிறகு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த வழக்கில் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில், ேநற்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படவே அசோக்குமாருக்கு இந்திய தண்டனை சட்ட பிரிவு 302 மற்றும் 376 கீழ் மற்றும் சிறுமி பாலியல் வன்ெகாடுமை தடுப்பு சட்டம் பிரிவு 6ன் கீழ் ஆயுள் தண்டனையும், மரண தண்டனையும் வழங்கி நீதிபதி ேவல்முருகன் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதனையடுத்து அசோக்குமாருக்கு 108 பக்க தீர்ப்பு நகல் கொடுக்கப்பட்டது. அதில், அசோக்குமார் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு வருவதாக வந்த தகவலையடுத்து செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள், மாதர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ேடார் குவிந்தனர். நல்ல தீர்ப்பு: அரசு தரப்பு வழக்கறிஞர் சீத்தாலட்சுமி கூறுகையில், இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து ஆஜராகினர். மேலும் போலீசார் தரப்பிலும் நல்ல ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. மற்றும் நீதிமன்றம் விரைவாக விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார். ஆதரவு கூடாது: திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறுகையில், சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக யாரும் ஆதரவு அளிக்ககூடாது எனவும், இந்த தண்டனை அரிதினும் அரிதான தண்டனை. இதன் மூலம் விழிப்புணர்வு மற்றும் பயம் ஏற்படும். குற்றம் குறையும் எனவும், இந்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்றார்.

எங்களுக்கு நிவாரணம்: தீர்ப்பு குறித்து கொலையான சிறுமி தனலட்மியின் தாய் மலர் கூறுகையில், எனது குழந்தையை கொடூர கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்ததை வரவேற்கிறோம். நான் கூலி வேலை செய்து என் மகளை படிக்கவைத்து ெபரிய ஆளாக ஆக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது மகள் கொலை செய்யப்பட்டாஇதனை நினைத்து சாப்பிடாமல் கவலையடைந்தோம். இந்த தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த நிவாரணம் என நினைக்கிறோம். இதுபோல எந்த தாய்க்கும் வரக்கூடாது என்றார். தக்க தண்டனை: தனலட்சுமியின் அக்கா திவ்யா கூறுகையில், இந்த தீர்ப்பின் மூலம் மன ஆறுதல் கிடைத்துள்ளது. எனது தந்தை இல்லாமல் எனது தாய் கூலி வேலை செய்து காப்பாற்றிய தங்ைகயை கொலை செய்த கொடூரனுக்கு ஆண்டவன் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளான். நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் தக்க தண்டனை கிைடத்துள்ளது என்றார்.

அசோக்குமார் வாக்குமூலம்: உத்திரமேருர் அடுத்த வாடாத ஊரை ேசர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அசோக்குமார். தந்தையை பிரிந்து தாய் மரியாவுடன் வாடாத ஊரிலிலுருந்து வந்து ஆலத்தூருக்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனியார் கம்பெனியில் ேவலை செய்துள்ளார். அதே கம்பெனியில் வேலை செய்த திவ்யாவை பார்க்க தான் அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வதாகவும், சம்பவத்தன்று திவ்யா ேவலைக்கு வரவில்லை. ஏன் என ேகட்க வீட்டிற்கு சென்றபோது தனியாக இருந்த தனலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்ததாகவும், அனைவரும் வருவதை பார்த்து ஓடியதாகவும் போலீஸ் வாக்குமூலத்தில் அசோக்குமார் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: