சென்னை முழுவதும் கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: 7 பேர் கைது

சென்னை: சென்னையின் பல இடங்களில் கால் சென்டர் நடத்திய சிலர், கடந்த 6 மாதங்களாக பொதுமக்கள் பலரை செல்பேகானில் தொடர்பு கொண்டு, லோன் மற்றும் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி வந்த  70 பெண்கள் உட்பட 125  பேரிடம் முன்பணம் செலுத்தும்படி கூறி, ₹1 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட கொண்டிதோப்பு  வெங்கடேஷ் (32), திருச்சி விக்னேஷ் (30), பரமத்தி வேலூர் பூபதி (28), சோழிங்கநல்லூர் சதீஷ் (28), பட்டாளம் சார்லஸ் (27), செய்யாறு திராவிட அரசன் (25), கோடம்பாக்கம் கிருஷ்ணகுமார் (26) ஆகிய 7 பேரை போலீசார் கைது  செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங் கள் பறிமுதல் செய்யப் பட்டன.

* கொளத்தூர் ஜெயராம் நகர் 2வது தெருவை  சேர்ந்தவர் தயாளன் (42). ஐடி நிறுவன அதிகாரி. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை  உடைத்து, பீரோவில் இருந்த 32 சவரன் நகைகள்ல ₹13  ஆயிரத்தை கொள்ளையடித்து  சென்றனர்.

* வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மூர்த்தி (40),  வில்லிவாக்கம் தேவர் தெருவில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று  முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ₹20  ஆயிரம்  மற்றும் அதே பகுதியை சேர்ந்த பரமானந்தம் (60) என்பவரின் மளிகை கடை,  மற்றொரு மளிகை கடை, ஜெராக்ஸ் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்  பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

* ஆவடி ஸ்ரீராம் நகரை  சேர்ந்த அலமேலு (37) நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நடந்து  சென்றபோது, 5 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.

* சவுகார்பேட்டை விநாயகா மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் மஞ்சுளாபாய் (67). இவர்,  நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, 2 வட மாநில  வாலிபர்கள் நூதன முறையில் நடித்து மூதாட்டியின் 5  சவரன் செயினை பறித்து  சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: