பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே ரூ.7,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இஸ்லாமாபத்: பாகிஸ்தான் - சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. சவுதி அரேபியா இளவரசருடன் 40-க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய தொழிலதிபர்கள் பாகிஸ்தானுக்கு வர உள்ளனர். இதனால் அரசு சாரா ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சொந்த தேவைக்கான பொருள்கள் அனைத்தும் 5 ட்ரக்குகள் மூலமாக இஸ்தான்புல் வந்து சேர்ந்தன. முகமது பின் சல்மானின் வருகை உறுதியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த தேதியில் வருகிறார் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

அவருக்காக 5 ட்ரக்குகளில் கொண்டு வரப்பட்ட பொருட்களில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் அடங்கும். மேலும் சவுதி இளவரசரின் பாதுகாப்பு படையினரும், சவுதி ஊடகங்களும் அவரது வருகைக்கு முன்பே பாகிஸ்தானை வந்தடைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முகமது பின் சல்மான் இளவரசராக பதவியேற்று பாகிஸ்தானுக்கு  வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன் ஏமன் விவகாரத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறபட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: