8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து: கப்தில் அதிரடி சதம்

நேப்பியர்: வங்கதேசம் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் 48.5 ஓவரில் 232 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன் (90 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார்.  முகமது சைபுதின் 41, சவும்யா சர்க்கார் 30, மெகதி ஹசன் மிராஸ் 26, மகமதுல்லா, சப்பிர் ரகுமான் தலா 13 ரன் எடுத்தனர்.நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், சான்ட்னர் தலா 3, ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்து எளிதாக வென்றது.  நிகோல்ஸ் 53 ரன் (80 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் மார்டின் கப்தில் 117 ரன் (116 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ராஸ் டெய்லர் 45  ரன்னுடன் (49 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 16ம் தேதி நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: