தாய்லாந்தில் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்து இளவரசி பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாங்காக்: தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து இளவரசி உபோல் ரடானாவின் பெயர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. பிரயூத் சான்-ஓ-சா பிரதமராக  பொறுப்பேற்றார். ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இந்நிலையில், பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த  மாதம் மன்னர் மகா வஜ்ரலாங்கோன் தேர்தல்  ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த  சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக தாய் ரக்ஷா சார்ட் கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு தாய்லாந்து இளவரசி உபோல் ரடானா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசியல் பதவியான பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிடுவதற்கு அந்நாட்டு மன்னரும் அவரது  சகோதரருமான மகா வஜ்ரலாங்கோன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதனை அடுத்து தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிரதமர் வேட்பாளர் பட்டியலில்  இளவரசி உபோல் ரடானா பெயர் இடம்பெறவில்லை. அவரது பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: