முட்டை விலை 460 காசுகளாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டையின் பண்ணை  கொள்முதல் விலையில், மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 450 காசில்  இருந்து 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், முட்டை வியாபாரிகள் 30 காசு குறைத்து கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகளை வாங்கிச்  செல்கிறார்கள்.  கோடை துவங்கும் முன்பே வெப்பம் அதிகரித்ததால் முட்டை உற்பத்தி குறைந்து விட்டது. தீவன பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது.  இதனால்தான் முட்டை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: