தென்னிந்தியாவில் வீடு விற்பனை அதிகரிப்பு

புதுடெல்லி: தென்னிந்தியாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கட்டுமான ஆலோசனை நிறுவனம் நடத்திய  ஆய்வில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி வட  மாநிலங்களில் 18 சதவீதமாகவும், மேற்கு மாநிலங்களில் 15 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஆண்டில் 67,850 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய  ஆண்டுடன் ஒப்பிடுகையில இது 77 சதவீத வளர்ச்சி.

புதிய வீடுகள் கட்டுவதில் டெல்லி என்சிஆர் 16 சதவீதம், மும்பை மற்றும் புனேயில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல், சென்னை, பெங்களூரு, ஐதராபாத்  உள்ளிட்ட  பகுதிகளில் விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 19 சதவீதம்தான். ஆனால் டெல்லி என்சிஆர் பகுதியில் மட்டும் விற்பனை ஆகாத வீடுகள்  எண்ணிக்கை 28 சதவீதம் உள்ளது என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: