இந்தியர்கள் பயன்பெறும் வகையில் கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல்: அமெரிக்காவில் நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வழங்கப்படும் கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எச்.-1பி அல்லது எல் விசாவில் தற்காலிகமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற கிரீன் கார்டு பெற வேண்டும். ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை (நிரந்தர குடியுரிமை அடையாள அட்டை) மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விண்ணப்பிக்கும் 7 சதவீதம் பேர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்டு பெற முடியும். இந்த வரம்புப்படி அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற நாட்டினர், கிரீன் கார்டு பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் மிக விரைவில் கிரீன் கார்டு பெற்று விடுகின்றனர். கிரீன் கார்டு வழங்குவதில் ஒவ்வொரு நாட்டுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பை தளர்த்த வேண்டும் என கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன. இதை ஏற்று கிரீன் கார்டு கட்டுப்பாடு தளர்த்துவதற்கான மசோதா, (எச்ஆர் 1044) அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு் அவைகளிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு  112  எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமானால், எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு விரைவில் நிரந்த குடியுரிமைக்கான கிரீன் கார்டு கிடைக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: