கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்ய தேசிய தேர்தல் நிதியம் உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

ஐதராபாத்: தேர்தல் செலவுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் நன்கொடையை வசூலித்து கொள்கின்றன. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கட்சிகள் பிரபல நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெறுவதை தடை செய்யும் வகையில் தேர்தல் தியத்தை உருவாக்க வேண்டும். இந்த நிதியத்துக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நன்கொடை வழங்க வகை செய்யலாம். தேர்தல் நிதிக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கலாம். 5 முதல் 10 ஆண்டுகள் வரை இந்த வரிவிலக்கை வழங்கலாம். பின்னர் இந்த அமைப்பு தன்னிச்சையாக செயல்பட தொடங்கியதும் வரி விலக்கை 50 சதவீதமாக குறைக்கலாம். இந்த நிதியத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும்.

 தேர்தல் நிதியை அதிகரிப்பது எப்படி என்பது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம். இதற்கு என சட்டத்திருத்தத்தையும் கொண்டு வரவேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. நஷ்டத்தை சந்திக்கும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கி அவற்றை அரசியல் கட்சிகளிடம் கொடுக்கும்போது அந்த நிறுவனத்தை  லாபம் அடைய செய்யும் நோக்கம் இருப்பதால் அது விரும்பத்தக்கதல்ல.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: