குவிக் ரைட் ஆப்

நன்றி குங்குமம்

தலைப்புதான் மேட்டரே!‘போற வழில என்னை டிராப் பண்ணிடுங்க...’ என காலையில் அலுவலகத்துக்கு பரபரப்பாக நாம் செல்கையில் யாராவது லிஃப்ட் கேட்கிறார்கள் இல்லையா... இதன் பின்னணியில் ‘லேட்டாக வந்தால் சம்பளத்தில் கைவைப்பேன்...’ என ஹெச்.ஆரில் தொடங்கி ‘நீயெல்லாம் வீட்லயே இருக்க வேண்டியதுதானே..?’ எனத் திட்டி ஃபைலை முகத்தில் வீசும் நிர்வாகி வரை பலரும் இருக்கிறார்கள் அல்லவா..?இதையெல்லாம் மனதில் வைத்துதான் பெங்களூரு நகர ‘iDisha Info Labs Pvt Ltd’ நிறுவன குழு ‘QuickRide’ App-ஐ டிசைன் செய்துள்ளனர். கேஎன்எம்.ராவ், ஷோபனா, நவீன், விஷால் லாவ்தி என நால்வர் அடங்கிய குழுதான் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

‘‘எங்க முதல் குறிக்கோளே டிராஃபிக் மற்றும் காற்று மாசை இந்தியாவுல கட்டுப்படுத்தறதுதான். உதாரணமா, இரண்டு கார்ல ஒவ்வொருத்தர் பயணம் செய்யறதுக்கு பதிலா ஒரே கார்ல இரண்டு பேரும் டிராவல் செய்தா ஓரளவு டிராஃபிக்கும் காற்று மாசும் குறையுமில்லையா..? ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, இல்லைனா ஒரே தெருவுல இருந்து வெவ்வேறு அலுவலகங்களுக்கு போறவங்க ஒரே வண்டில போனா பெட்ரோலும் மிச்சமாகுமே..? சாலைகள்ல வண்டிகள் எண்ணிக்கையும் குறையுமே..? இதையெல்லாம் யோசிச்சுதான் இந்த appஐ டிசைன் செய்தோம்...’’ கோரசாக சொல்லும் இவர்களுக்கு முதலில் பாதுகாப்பு முறைகள்தான் பெரும் சவாலாக இருந்திருக்கின்றன.

எனவே,அலுவலக மெயில் ஐடி இருந்தால்தான் ஒரு நபர் தனக்கான கணக்கை குயிக் ரைடில் தொடங்க முடியும் என்ற கண்டிஷனை வைத்திருக்கிறார்கள்.இதில் உறுப்பினர்களாக வேண்டியவர்களிடம் கார் அல்லது பைக் இருக்க வேண்டும். அப்போதுதான் லிஃப்ட் கொடுப்பவராகவோ லிஃப்ட் கேட்பவராகவோ மாற முடியும். இந்த app இல் கணக்காளர்களின் வண்டி எண், அலுவலக முகவரி, போன் நம்பர் என அனைத்தும் இருப்பதால் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. இதன் மூலம் எரிபொரு ளுக்காக நாம் செலவழிக்கும் தொகை கணிசமாகக் குறைகிறது.இந்த அடிப்படையிலேயே இன்று Carpool, RideShare, Waze, Bikepool என நிறைய apps இந்தியாவில் இயங்குகின்றன.

‘‘கடந்த ஆறு மாதங்களா இந்த appஐ பயன்படுத்தறேன். என் அலுவலகத்தை சேர்ந்தவங்களே எனக்கு கஸ்டமர்களா இருக்காங்க. இப்ப எனக்குனு தனி கிளப்பே இருக்கு! இதுவரை நான் பார்க்காத பக்கத்து தெரு ஆட்கள் எல்லாம் இப்ப நண்பர்களா ஆகிட்டாங்க!’’ எனப் புன்னகைக்கிறார் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்  சிவதாணு. இதை ஆமோதிக்கிறார் ஐடி ஊழியரான ராம் கணேஷ். ‘‘இதுவரை 480 ரைட் ஷேர் பண்ணியிருக்கேன்.  நம்மால எவ்வளவு கிலோ கார்பன் டை ஆக்சைடு குறைஞ்சிருக்குனு ஆரம்பிச்சு எத்தனை ஃப்ரெண்ட்ஸ் நமக்கு கிடைச்சிருக்காங்கனு எல்லா விவரங்களும் appல வந்துடும்!’’ என்கிறார் ராம் கணேஷ்.    

-ஷாலினி நியூட்டன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: