சவாலான விலையில் புதிய நிஸான் கிக்ஸ்

மிக சவாலான ஆரம்ப விலையில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, பெட்ரோல், டீசல் மாடல்களில் தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 106 பி.எஸ் பவரையும், 142 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 110 பி.எஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. XV வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் வீல், பனி விளக்கு, ரூப் ரெயில், ஆர்ம் ரெஸ்ட் வசதியுடன் பின் இருக்கை, ரியர் வைப்பர், 8 அங்குல ப்ளோட்டிங் தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்ச் மற்றும் வெஹிக்கிள் டைனமிக் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

XV Premium வேரியண்ட்டில் லெதர் உறையுடன்கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, ட்வீட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

XV Premium Option என்ற வேரியண்ட்டில் கார்னரிங் பனி விளக்கு, க்ரோம் ஆக்சஸெரீகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோ வைப்பர், பாலோ மீ ஹெட்லைட், பின்புற பனி விளக்கு, 360 டிகிரி கேமரா மற்றும் இரட்டை வண்ண கலவை பெயிண்ட் ஷேடுகளில் கிடைக்கிறது. பியர்ல் ஒயிட், பிளேடு சில்வர், பிராரன்ஸ் க்ரே, ஆம்பர் ஆரஞ்ச், டீப் புளூ பியர்ல், நைட் ஷேடு மற்றும் பயர் ரெட் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட், பியர்ல் ஒயிட் - ஆம்பர் ஆரஞ்ச், பியர்ல் ஒயிட்- ஓனிக்ஸ் பிளாக், பிரான்ஸ் க்ரே - ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் பயர் ரெட் - ஓனிக்ஸ் பிளாக் ஆகிய இரட்டை வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் ரூ.9.55 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.14.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. போட்டியாளர்களைவிட விலை மிக குறைவாக இருப்பதால் நிச்சயம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: