திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...! - ஜாவா

இந்திய வாடிக்கையாளர்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி, ஜாவா மோட்டார் சைக்கிள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் ஜாவா பைக்குகள் ரீ-லான்ச் ஆனதால், அதன் நேரடி போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஆனால், ஜாவா பைக் பிரியர்கள் மகிழ்ச்சி கடலில் திளைக்கின்றனர். ஜாவா (Jawa) மற்றும் ஜாவா 42 (Jawa Forty Two) என்ற பெயர்களில், 2 ரெட்ரோ-கிளாசிக் ரக மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுக விழாவில், ஜாவா பெராக் (Jawa Perak) என்ற பாபர் ஸ்டைல் கஸ்டம் மோட்டார் சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவில்லை. ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனையில் அதிக கவனம் செலுத்த உள்ளதால், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் எப்போது விற்பனைக்கு கிடைக்கும்? என்ற தகவல் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளின் விலை ரூ.1.89 லட்சம். ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய 2 பைக்குகளை காட்டிலும் இதன் விலை அதிகம் ஆகும். ஜாவா பைக்கின் விலை ரூ.1.64 லட்சம், ஜாவா 42 பைக்கின் விலை ரூ.1.55 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். விலை அதிகம் என்பதற்கு ஏற்ப, ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் அதிசக்தி வாய்ந்தது. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகளையும் பெற்றுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மோட்டார் சைக்கிள்களில், 293 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளில் அதிக திறன்வாய்ந்த 334 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 30 பிஎச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. பெராக் பைக் சந்தைக்கு எப்போது வரும் என ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: