பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் : ஒரு டிக்கெட் ரூ.251 தான்!

ஜப்பானில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக மர கியோட்டோ வீடு போன்ற ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கி.பி 794 முதல் 1868 வரை பண்டைய ஜப்பானின் தலைநகரமாக இருந்த நகரம் கியோட்டோ. இந்நகரில் மரத்தினாலான வீடுகள் மிகவும் பிரபலமானவை. அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வீடுகளை மையப்படுத்தி புதிய ஆடம்பர ரயிலை ஜப்பானிய ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. கியோ- கராகு ரயில் என அழைக்கப்படும் புதிய எக்ஸ்பிரஸ் ரயில், கியோ ரயிலின் இரண்டாவது தலைமுறை தயாரிப்பாகும்.

இது ஒசாக்கா உமேடா மற்றும் கியோட்டோ கவரமச்சி நிலையங்களுக்கு இடையே இயங்கும் என கிரேபி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ரயிலின் உள் வடிவமைப்பு தீம், “ஜப்பானிய நவீன, கியோமச்சியா (கியோட்டோவில் உள்ள மரத்தாலான வீடுகள்) என்பதாகும். இந்த ரயிலில் இணைக்கப்படும் ஆறு கோச்களும் அந்நாட்டின் பருவகாலங்களை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. முதல் கோச் இலையுதிர்கால உணர்வை அளிக்கும் வகையிலும், 2வது கோச் மூங்கில்களுடன் குளிர்கால உணர்வை அளிக்கும் வகையிலும்,

மூன்றாவது கோச் செர்ரி மலர்களுடன் வசந்த கால உணர்வை அளிக்கும் வகையிலும், 4வது கோச் கோடைகால உணர்வை குறிக்கும் வகையிலும் ஐந்து மற்றும் ஆறாவது கோச்கள் மைக்ரோ சீசன்களை பெருமைப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.கூடுதலாக, கிரேபி நிறுவனம் ரயிலின் கோச்களில் வட்டமான ஜன்னல்களை அமைத்துள்ளதோடு, கோச்களின் உள்புறம் ஜப்பானிய தோட்டங்களையும் உருவாக்கியுள்ளனர். இது பயணிப்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த ஆடம்பர ரயிலுக்கு சிறப்பு டிக்கெட் எடுக்கவோ முன்பதிவு செய்யவோ தேவையில்லை. ரயில் இயக்கப்படும்  நேரத்திற்கேற்ப நிலையங்களில் சுலபமாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். டிக்கெட் விலை சுமார் 251 ரூபாய்தான் (சுமார் 400 யென்கள்). கியோ- கராகு ரயில் வரும் மார்ச் 2019ல் தனது முதல் பயணத்தைத் துவக்க உள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: