100 கோடி வீடுகளை ஸ்மார்ட்டாக்க வருகிறது ‘கூகுள் அசிஸ்டென்ட்’

உலகின் மிகப் பெரிய தேடல் வலைதளமாக கூகுள் உள்ளது. இந்த கூகுள் நிறுவனத்தின் மற்றொரு அறிமுகம் ‘கூகுள் உதவி’. நாம் சொல்வதை செய்து முடிப்பது தான் இந்த கூகுள் உதவி. வீடுகளில் பயன்படுத்தும் அனைத்து இயந்திரங்களையும் இந்த கூகுள் உதவியின் மூலம் இணைக்க முடியும். இதன் மூலம் நாம் ஸ்விட்சை அழுத்த வேண்டியதில்லை. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது கூகுள் உதவியை பயன்படுத்துவோர் 4 மடங்கு அதிகரித்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த வசதியை 50 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.

இன்னும் ஒரு சில வாரங்களில் 100 கோடி பேருக்கு கூகுள் உதவி வசதியை ஏற்படுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூகுள் உதவி 14 நாடுகள், 8 மொழிகளில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது 80 நாடுகளில் 30 மொழிகளில் உள்ளது. இயற்கையான உரையாடலுக்கு தகுந்த வசதி கூகுள் உதவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தரப்பட்ட கலாசாரம் மற்றும் மொழிகளுக்கு தகுந்தவாறு கூகுள் உதவி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் பேசுவதை உணர்ந்து கொண்டு இயற்கையான ஒலியுடன் கூகுள் உதவி செயலாற்றும். நியூயார்க்கில் வெப்பநிலை என்ன என்று கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் தரும்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல இந்த கூகுள் உதவியிடம் உரையாட முடியும். கூகுள் உதவியின் துணையுடன் ஒவ்வொரு இல்லங்களையும் ஸ்மார்ட் இல்லமாக மாற்ற முடியும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 600 சதவீதம் கூடுதல் இயந்திரங்களுடன் கூகுள் உதவியை இணைக்கப்பட்டுள்ளது. கூகுள் உதவியை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போட்டியாளர்களை எதிர் கொள்ளவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல்வேறு உத்திகளை கூகுள் நிறுவனம் கையாண்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: