பாம்பன் தூக்குப்பாலத்தில் தூத்துக்குடி படகு மோதியது

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் நேற்று ரயில் பாலத்தை கடந்து செல்ல முயன்றபோது, தூக்குப்பாலத்தில் மோதிய மீன்பிடி படகுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தூக்குப்பாலத்தில் இரும்பு பீம் ஒன்றில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்து தற்போது பாலத்திற்கு துருப்பிடிக்காத பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த குழந்தை சேசுக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகு  மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் தென்கடல் பகுதிக்கு நேற்று வந்தது. அதிகாரிகளின் அனுமதி பெற்று ரயில் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி கடலுக்கு படகு செல்ல முயன்றபோது நீரோட்டத்தினால் இழுத்து செல்லப்பட்ட படகின் மேல் பகுதி தூக்குப்பாலத்தில் மோதி சேதமடைந்தது. உடனே பராமரிப்பு பணியாளர்கள் மீன்பிடி படகை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள்  படகுக்கு அபராதம் விதித்து, உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: