சார்பதிவாளர் அலுவலகங்களில் ஜன.28ம் தேதி முதல் 5000 மேல் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்: பதிவுத்துறை ஐஜி தகவல்

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் 1000 மேல் ரொக்கமாக பெறக்கூடாது. ரூ.5000 க்கு மேல் ஆன்லைன் மூலம் வரும் ஜன.28ம் தேதி முதல் பணம் செலுத்த வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம், சீட்டு, சங்கம் பதிவு செய்யப்படுகிறது. பதிவு கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் பணம் ரொக்கமாக செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. இதை பயன்படுத்தி சிலர் கருப்பு பணத்தை ரொக்கமாக செலுத்தி வந்தனர். இதை தொடர்ந்து ரூ.1000க்கு மேல் ரொக்கமாக பெறக்கூடாது என்று பதிவுத்துறை உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ரூ.1000க்கும் மேல் வங்கி காசோலையாக பெறப்பட்டு வந்தது.

 இந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்பேரில், ரூ.1000க்கு குறைவாக வசூலாகும் கட்டணங்கள் ரொக்கமாக பெறலாம். ரூ.1000த்தில் இருந்து ரூ.5000 வரை வங்கி வரைவோலையாக தரலாம். எந்தவித உச்சவரம்பின்றி இணையவழி நேரடியாக 58 வங்கி மூலம் பணம் செலுத்தலாம். இந்த நடைமுறை ஜனவரி 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: