தமிழக காவல் துறையில் முதல் முறையாக மாணவர் காவல் படை: போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக காவல் துறையில் முதல் முறையாக சென்னையில் மாணவர் காவல் படை என்ற புதிய அமைப்பை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை, வருவாய்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாணவர் காவல் படையை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் மற்றும் சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கல்வி அலுவலர்(வடக்கு)கோபாலகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ் குமார் அகவர்வால், தினகரன், துணை கமிஷனர்கள் மல்லிகா, திருநாவுக்கரசு, விமலா உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்ட மாணவர் காவல் படையில் 138 பள்ளிகளிலிருந்து 6,072 மாணவ, மாணவியர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்த மாணவர் காவல் படையில் சேரும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, சமூக தீமைகளுக்கு எதிராக பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து உயர் போலீசார் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

 அதன் பிறகு சென்னை பெரு நகர காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு மற்றும் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழக காவல் துறையில் முதல் முறையாக சென்னை மாநகர காவல் துறையில் தான் மாணவர் காவல் படை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் மாணவர் காவல் படை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: