ஜெம் மருத்துவமனை சார்பில் தேசிய கேஸ்ட்ரோ எக்ஸ்போ 2019

சென்னை: ரோபோடிக் அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோபி மற்றும் கேஸ்ட்ரோஎண்ட்ராலஜி சேவைகளுக்கு பெயர் பெற்ற ஜெம் மருத்துவமனை சார்பில், பொதுமக்களிடம் நோய் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையில், ‘வயிறு எக்ஸ்போ’ 2வது தேசிய கண்காட்சி கடந்த 18ம் தேதி தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.இக்கண்காட்சியின் தொடக்க விழா சென்னை பெருங்குடி, எம்ஜிஆர் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. கண்காட்சியை இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் எம்.பொன்னுசுவாமி தொடங்கி வைத்தார்.இதில் நோய் சார்ந்த கேள்விக்கான விடைகள், 3டி மாடல்கள் கொண்டு செயல்முறை விளக்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ விளக்கங்கள், அறுவை சிகிச்சை குறித்த 3டி படங்கள், யோகா உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகிறது.

கண்காட்சி குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், வலி குறைந்த மருத்துவ சிசிச்சைகள் வழங்க ரோபோடிக் அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோபி போன்ற முறைகள் வந்துவிட்டன. ஜன.30 முதல் சென்னை ஜெம் மருத்துவமனையில் எங்கள் சேவை தொடங்கப்படும். என்றார்.சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.அசோகன் கூறுகையில்; இந்த கண்காட்சி மூலம் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார். கண்காட்சியில் பங்கு பெறுபவர்கள் ‘வயிறு 2.0 எக்ஸ்போவில் என் அனுபவம்’ என்ற பெயரில் 30 நொடி வீடியோவை பதிவு செய்து #GEMGastroExpo என்ற ஹேஷ்டேகில் சமூக வலைதளங்களில் பகிரலாம். அதிகம் பேர் பார்க்கும் வீடியோவுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: