துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப்பணி மார்ச்சில் தொடங்க முடிவு

* தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலைமையில் ஆலோசனை

* நீரோட்டம் பாதிக்காதவாறு திட்டத்தை நிறைவேற்ற அறிவுரை

சென்னை: துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மார்ச்சில் தொடங்குகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ₹1815 கோடி செலவில் கடந்த 2010 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 19 கி.மீட்டரில் 14 கி.மீட்டர் தூரம் கூவம் கரையோரமாக அமையவிருந்தது. இந்த திட்டத்தில் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் இருப்பதாக கூறி தமிழக அரசு கடந்த 2012ல் நிறுத்தியது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த திட்டதை செயல்படுத்துவதற்கான வேலையை இந்திய ேதசிய நெடுஞ்சாலை ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, திருந்திய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இந்த திட்டத்தின் படி மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி வரை மேலும், 10 கி.மீ நீளத்திற்கு பறக்கு சாலை நீட்டிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் திருத்திய மதிப்பீடு ₹1,815 கோடியில் இருந்து ₹2,400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை எப்படி அமைகிறது என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துறை முக அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் விளக்கப்பட்டது. அதன்படி, பறக்கும் சாலை முழுவதும் கூவம் வழியாக தான் பயணிக்கிறது. இந்த கூவத்தில் பயணிக்கும் போது நீரோட்டம் தடைபடாமல் இருக்கும் வகையில் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வடிவமைப்பில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து அப்போது எடுத்துரைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாற்றங்களை செய்த பிறகு இந்த திட்ட பணிகளை தொடங்க நெடுஞ்சாலைத்துறை ஆணை யம் முடிவு செய்துள்ளது. அதாவது, மார்ச் மாதத்தில் முதற்கட்ட பணிகளை தொடங்க தேசிய நெடுங்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: