முதல்வருடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்திப்பு

சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று சந்தித்தார். அப்போது மகேந்திரகிரியில் பணியாற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வழங்கிய கஜா புயல் நிவாரணத்தொகை ரூ.14.60 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார்.பின்னர், சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மகேந்திரகிரியில் பணிபுரியும் இஸ்ரோ விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் சார்பாக கஜா புயலால் பாதித்தவர்களுக்கு ரூ.14.60 லட்சத்தை திரட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளோம். நாட்டில் 6 இடங்களில் மாணவர்களுக்கான விஞ்ஞான பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், ஜலந்தர் மற்றும் அகர்தலாவில் அமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழத்தில் திருச்சியில் விஞ்ஞான பயிற்சிக்கூடம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் இந்த பயிற்சிக்கூடத்தில் சேரலாம். இந்த பயிற்சி கூடத்தில் மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களை இஸ்ரோ சோதனை செய்து பெற்றுக்கொள்ளும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: