சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்காவை வீட்டில் சேர்க்க கணவர் மறுப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்காவை அவரது கணவர் வீட்டில் அனுமதிக்காததால் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தரிசனம் செய்ய முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் கனகதுர்கா, பிந்து ஆகிய இரு ெபண்களை போலீசார் ரகசியமாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். அதன்பின் கேரளாவில் பெரும் கலவரம் வெடித்தது. அதோடு பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களுக்கும் தனிப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி இருவரையும் போலீசார் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் பிந்துவை ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பில் இருந்து வீடு திரும்பிய கனகதுர்கா தனது மாமியார் தாக்கியதாக கூறி கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு கனகதுர்கா பெரிந்தல்மன்னாவில் உள்ள கணவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். ஆனால் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி மற்றும் உறவினர்கள் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தனர். எந்த காரணம் கொண்டும் மனைவியை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என கிருஷ்ணன் உண்ணி போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை பெரிந்தல்மன்னாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கனகதுர்கா தற்போது காவல் நிலையத்தில் தங்கி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: