ஒய்எஸ்ஆர் கட்சியில் தெலுங்கு தேசம் எம்எல்ஏ

திருமலை: ஆந்திராவில் ராஜம்பேட்டை தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக முதல்வர் அறிவித்துள்ளார்.ஆந்திராவின் கடப்பா  மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜம்பேட்டை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மல்லிகார்ஜுன ரெட்டி மட்டும் வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மலமடுகு தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆதிநாராயண ரெட்டி அரசியல் மாற்றத்தின் காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அவருக்கு சந்திரபாபு நாயுடு அமைச்சர் பதவி வழங்கினார்.

இருப்பினும் மல்லிகார்ஜுன ரெட்டிக்கு அரசு கொறடா பதவியையும் அவரது தந்தைக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவரை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: