திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எதிர்த்து மனு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் மதிப்பனூரை சேர்ந்த வேதா (எ) தாமோதரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜன. 28ல் நடக்கும் என கடந்த டிச. 31ல் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 18 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்ததை பலரும் எதிர்த்தனர். கஜா புயல் நிவாரண பணிகள் முடியாத நிலையில் இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், தமிழக தலைமை செயலர் கடிதம் மூலம் கேட்டு கொண்டதற்காக ரத்து செய்ய முடியாது. இது சட்டவிரோதம். எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். ரத்து செய்த அறிவிப்பு செல்லாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: