நாகர்கோவிலில் கலெக்டர் ஆபிஸ் வளாக கட்டிடங்களுக்கு சீல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஐகோர்ட் உத்தரவுப்படி 2வது கட்டமாக 7 விதிமீறல் கட்டிடங்கள்  சீல் வைக்கப்பட்டன. நாகர்கோவிலில் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்கள் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.  இதையொட்டி, கடந்த 2013ம் ஆண்டு விதிமீறிய  58 நிறுவனங்கள் சீல்  வைக்கப்பட்டன. இந்தநிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீல் வைத்தது சரி எனவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதி  அளித்திருந்தது. இதைஎதிர்த்து நிறுவனங்கள் மேல்முறையீடு  செய்தன. தற்போது, 58 வழக்குடன், புதியதாக 4 வழக்குகள் சேர்த்து என 62 வழக்குகளை வரிசையாக விசாரித்து ஐகோர்ட் தீர்ப்பு அளித்து வருகிறது.

கடந்த 10ம்தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஹோட்டல் மற்றும் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு   உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று 2வது கட்டமாக கலெக்டர் ஆபீஸ் எதிரில் உள்ள டீக்கடை, செல்போன் கடை உள்ளிட்ட 7 கட்டிடங்களுக்கு  சீல் வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: