சிலை வைத்து, படையலிட்டு சிறையில் பூஜை செய்த ஏட்டு மீது நடவடிக்கை

சேலம்: ஊத்தங்கரை கிளை சிறையில் பொம்மை சிலை வைத்து சாமி கும்பிட்ட விவகாரத்தில் ஏட்டு மீது நடவடிக்கை பாய்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளை சிறையில் 3 மணிநேர வேலை  நேரம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு வார்டன்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஏட்டு தப்பகுழி என்பவர் சூப்பிரண்டு விஸ்வநாதனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் களிமண்ணால் ஆன பொம்மை சிலையை எடுத்து வந்து, பழம், பத்தி வைத்து  சிறைக்குள்ளேயே வழிபாடு செய்ததுடன், தனக்கு பணி நேரத்தை மாற்றியவர்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என சாபம் விட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக சிறைத்துறை ஏடிஜிபிக்கு, அறிக்கை அனுப்பிய சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், நாளை ஊத்தங்கரை கிளை சிறைக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்துகிறார். அதன்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: